அடிக்கடி செக்ஸ் படங்களை பார்த்தால் ஆபத்து? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
அடிக்கடி செக்ஸ் படங்களை பார்த்தால் ஆபத்து? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
வக்கர எண்ணங்களைத் தூண்டும் ஆபாசப் படங்கள் அடிக்கடி பார்த்தால் ஆண்மைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என ஆய்வுகள் எச்சரிக்கை விடுக்கின்றது.
இந்த உலகில் உயிராக பிறந்த அனைவருக்குமே ஆண் மீது பெண்ணுக்கும், பெண் மீது ஆணுக்கும் ஒரு காதல் உண்டு. இன்னும் சொல்லப் போனால் ஒருவித ஈர்ப்பு உண்டு. குறிப்பாக, உயிராக பிறந்த அனைவருமே இனப்பெருக்கத்தில் தெரிந்தோ தெரியாமலே ஈடுபடுகின்றோம். இதற்கு நமது காம உணர்வுகள் தூண்டப்படுவதே காரணம்.
இயற்கைாக வரும் உணர்வுகளுக்கு மாறாக, அதை தேவையின்றி தேவையில்லாத நேரத்தில் தூண்டப்படுவதும் தான் பெரும் ஆபத்தை ஏறபடுத்துகிறது.
இது குறித்து டாக்டர்கள் சிலரிடம் கருத்து கேட்ட போது, தற்போது இன்டர்நெட் போன்ற சாதனங்கள் மூலம் உலகம் மிகவும் சுருங்கிவிட்ட காரணத்தினால், பலரும் நெட் மூலம் ஆபாச இணையதளங்களில் வக்கிர எண்ணங்களை தூண்டும் ஆபாச படங்களை பார்த்து ரசிக்கின்றனர்.
இவ்வாறு ஆபாச படங்களை ஆண்கள்தான் பெருமளவில் அதிகம் பார்ப்பதாக கூறப்படுகிறது. இதில், பெண்களிலும் சிலர் ஆபாசப் படம் பார்ப்பவர்களும் உள்ளனர்.இதை மறுப்பதற்கு இல்லை.
இதற்கு காரணம், மூளையின் உற்சாக மையத்தை தூண்டிவிடக்கூடிய, டோபமைன் என்ற ஹார்மோமன் அதிக அளவில் சுரந்து, கடைசியில், தனது செக்ஸ் பாட்னருடன் உண்மையான இன்பத்தை அனுபவிக்க இயலாமல் போய் விடும்.
ஆனால், இப்படி ஆபாசப் படத்தை இன்டர்நெட்டிலோ அல்லது வேறு வழிகளில் அடிக்கடி பார்த்து உணர்வுகளை தூண்டிவிட்டால், நமது படுக்கை அறையில் நமது செக்ஸ் பாட்னரை திருப்தி செய்ய முடியாது. செக்ஸ் படங்களை பார்க்கும் போதே நம்மை அறியாமல் விந்து வெளியாகும், இரவில் நன்றாக தூக்கம் வராது. மேலும், எப்போதும் செக்ஸ் எண்ணங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கும். இதனால் பல பிரச்சினைகளுக்கு அவர்கள் ஆளாவதாக அமெரிக்காவில் ஒரு பாலியல் ஆய்வுகள் படம் பிடித்துக் காட்டுகிறது.
இது போன்ற ஆபாசப் படங்களை அடிக்கடி பார்த்து செக்ஸ் வாழ்கையில் தோல்வி அடைந்த பலரும் தற்போது செக்ஸ் கவுன்சிலிங்குக்கு அதிக அளவில் சென்று வருகிறார்களாம். இதில் சென்னை முதலிடம் தகவல். எதிலும் எச்சரிக்கை தேவை என்கின்றனர்.