திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. குழந்தைகள் உலகம்
  3. எழுச்சிக் கட்டுரைகள்
Written By Sasikala

குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை மாற்ற என்ன செய்யலாம்?

குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை மாற்ற என்ன செய்யலாம்?

குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.


 
 
குழந்தை புட்டிப்பால் குடிக்கும்போது, புட்டியில் பால் காலியானதும் தாய் அதை அப்புறப்படுத்திவிடுகிறார். 
 
இதனால் குழந்தைக்குச் சுவைக்கும் இன்பம் நிறைவடைவதில்லை. இந்த ஏமாற்றத்தை ஈடுசெய்ய குழந்தை விரல் சூப்பத் தொடங்குகிறது.
 
குழந்தைகளை கண்டிப்பதாலோ, தண்டிப்பதாலோ இந்த பழக்கத்தை மட்டும் அல்லாமல் எந்த ஒரு பழக்கத்தையும் மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 
விரல் சூப்பும் குழந்தைகளின் விரல்களில் வேப்பெண்ணெய் தடவுதல், பேண்டேஜ் போடுதல் போன்ற வன்முறையான செயல்கலைத் தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடைவெளியை துவக்கத்திலேயே அதிகரித்துவிடும்.
 
விரல்களைச் சூப்பும் குழந்தைகளுக்கு அந்த விரல்களுக்கு ஏதாவது வேலை இருக்கும்படி ஓவியம் வரைதல், புத்தகங்களைப் படிக்க வைத்தல் போன்ற மாற்று வழிகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இப்படி செய்வதால் குழந்தைகள் சிறிது சிறிதாக இப்பழக்கத்தை விட்டுவிடுவார்கள்.
 
சில குழந்தைகள் இரவில் தூக்கத்தின் போது கை சூப்பும் இந்நிலையில் பெற்றோர் விரல்கலை எடுத்து விட்டு அதற்கு பதிலாக தூங்கும்போது கையில் ஏதாவது ஒரு விளையாட்டுப் பொம்மையைப் கொடுத்தால், அந்த பொம்மையை பிடித்துக் கொண்டிருகிறோம் என்கிற கவனத்தில் விரல் சூப்பாமல் இருக்கும்.
 
‘நீ விரல் சூப்பாது இருந்தால் உனக்கு அன்பளிப்பு தருவேன்’ என கூறி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் உங்கள் பேச்சை கேட்டால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக அவர்களுக்குப் பிடித்ததை வாங்கி கொடுக்க வேண்டும். இப்படி செய்து வர, விரைவில் அந்த பழக்கத்தை அவர்கள் மறந்து விடுவார்கள்.
 
விரல் சூப்பும் குழந்தைகளிடம் அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக, அந்த விரல்களில் சூடு போடுவது, குழந்தைகளை அடிப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதை விட குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரிடம் காண்பித்துச் சிகிச்சை பெறுவதே சிறந்தது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்