1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By

சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்....!

ஒருவன் நெருப்பினுள் கூட தூங்கி ஓய்வெடுக்க முடியும். ஆனால், வறுமையில் ஒருவனால் கண்மூடித் தூங்குதல் என்பது முடியாது.
* குறிக்கோளை மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி கிடக்கிறது.
 
* உங்களுக்குள் இருக்கும் தெய்வத்தன்மையை வெளியில் பரவச் செய்யுங்கள். அந்த தெய்வீக இயல்பே நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஒழுங்குள்ளதாக மாற்றிவிடும்.
 
* எல்லா உயிர்களும் கோயில் என்பது உண்மைதான். ஆனால், மனிதவுயிரே மகத்தான கோயில். அதை வழிபட இயலாதவன் வேறு எதையும் வழிபட  முடியாது.
 
* யாருடைய மனம் ஏழை எளியவர்களுக்காக இரக்கம் கொள்கிறதோ, அவரே மகாத்மா.
 
* உடலில் உள்ள குறைபாடுகளை நினைத்து துயரப்படுவதால் பயன் ஏதும் உண்டாகாது. மாறாக, அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் மனதில் ஊக்கத்தை  வளர்த்துக் கொண்டால் வாழ்வில் உயர முடியும்.
 
* மலைபோல தடைகள் குறுக்கிட்டாலும், மனவுறுதியை மட்டும் கைவிடாதீர்கள். உங்களுக்கு சரியெனப் பட்டதை இலக்காக கொண்டு முன்னேறுங்கள்.
 
* அரிய பெரிய விஷயங்களை தியாகமனம் படைத்தவர்களால் மட்டுமே சாதிக்க முடியும்.
 
* நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை.. இதுவே உங்கள் தாரக மந்திரமாகட்டும்.
 
* சுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். ஒழுக்கத்தின் இலக்கணம் இது தான்.