அதிர்ஷ்டம் வந்தால் ஆனந்தக்கூத்தாடுவதும், துன்பம் வந்தால் துவண்டு போவதும் கூடாது. எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. * சத்தியம் தான் நமக்கு உற்ற துணை. எப்போதும். உற்சாகத்தை இழக்கக் கூடாது. பிறப்பும், இறப்பும் உலகின் இயற்கை என்பதை உணர்ந்து பணிவோடு நடக்க வேண்டும். * உடலையும், உள்ளத்தையும் தூய்மையான நிலையில் வைத்து, பக்தி சிரத்தையுடன் சேவை செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்வதில் தயக்கம் கூடாது. ...