வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By Sasikala

அன்னை தெரசாவின் அற்புத பொன்மொழிகள்...!!

கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் அன்னையாக முடியும், கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும்.

* அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீ தான்.
 
அன்பை மட்டும் கடன் கொடுங்கள். அது மட்டுமே, அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும்.
 
தண்டனை கொடுப்பதற்குத் தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.
 
எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்.? கவலையை விடுங்கள். வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள்.
 
கண்ணுக்குத் தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால்... கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை...
 
உன்மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி. உன்மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி
 
இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய் இரு கை உன்னை வணங்கும் கடவுளாக
 
வெறுப்பது யாராக இருந்தாலும். நேசிப்பது நீங்களாக இருங்க...
 
இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.