கொக்கியில் தொங்கி செலுத்தும் நேர்த்திக்கடன்!
|
இலங்கையை ஆண்டதாகப் புராணங்கள் கூறும் இராவணனின் மகனான மேகநாதனை தெய்வமாக வணங்கும் இந்த பழங்குடி மக்கள், தங்களுடைய பிரார்த்தனை நிறைவேறியதும் மேகநாதனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதே கால் விழாவாகும்.
கால் என்பது மூங்கிலால் ஆன ஒரு நீண்ட கழியாகும். நாம் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச பயன்படுத்தும் ஏற்ற மரம் போல உள்ளது. அதன் முனையில் கட்டப்பட்டுள்ள கயிறுகளில் இரண்டு கொக்கிகள் தொங்குகின்றன. பிரார்த்தனை நிறைவேறியதற்காக நேர்த்திக்கடன் செலுத்துபவர் முதுகில் அந்த கொக்கிகளைக் குத்துகின்றனர். அதில் அவர் தொங்கிக் கொண்டிருக்கும் போது, கால் எனும் அந்த மரம் சுழற்றப்படுகிறது. வேண்டுதலுக்கு ஏற்றவாறு இத்தனை தடவை என்று அது சுற்றப்படுகிறது.
இப்படி தங்களுடைய முதுகில் கொக்கியால் குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துபவர்களை படியார்கள் என்று அழைக்கின்றனர்.
இந்த நேர்த்திக்கடன் செலுத்தும்போது தங்களுக்கு எந்த வலியும் தெரிவதில்லை என்று படியார்கள் கூறுகின்றனர். இப்படி நேர்த்திக்கடன் செலுத்திய பவார் சிங் என்பவர், தனக்கு ஆண் பிள்ளை வேண்டி மேகநாதனிடம் பிரார்த்தனை செய்ததாகவும், அந்த பிரார்த்தனை நிறைவேறி ஓராண்டிற்குள்ளேயே தனக்கு குழந்தை பிறந்ததாகவும், அதற்காக தனது நேர்த்திக்டனை செலுத்தியதாகவும் கூறினார்.
|
நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் மட்டுமல்ல, நம்மிடம் பேசிய பார்மர் சிங் என்பவர், ஒவ்வொரு ஆண்டும் எவ்வித பிரார்த்தனையும் இன்றி இப்படி நேர்த்திக்கடன் செலுத்துவதாகக் கூறுகிறார்.
கொக்கியில் தொங்குவதற்கு முன்பு சில நாட்களுக்கு அவர்களின் முதுகில் தொடர்ந்து மஞ்சள் தடவி வருகின்றனர். ஆனாலும், நேர்த்திக்கடன் செலுத்தும் படியார்கள் சிலரின் காயத்தில் இருந்து ரத்தம் பெருக்கெடுக்கிறது. இப்படிப்பட்ட பழக்கங்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் கூட உள்ளது என்று ஆங்கில மருத்துவர்கள் மிரட்டுகின்றனர். ஆனால், இது எங்களது பாரம்பரியம் என்று அதனை தவிர்க்க மறுக்கின்றனர் அம்மக்கள்.
இது குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள். எங்களுக்கு எழுதுங்கள்.
