கரேடி வாலி மா நிகழ்த்திய அதிசயம்!
|
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் கரேடி கிராமத்தில் அதிசயத்தை நிகழ்த்தும் இந்த தெய்வம் சிலை வடிவில் உள்ளது.
வாசனையுடன் அம்மனின் சிலையில் இருந்து வெளியேறும் அந்த நீர் புனிதமானது என்றும், எல்லா நோய்களையும் தீர்க்கவல்லது என்றும் அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
|
முதலில் தாங்கள் அந்தத் தண்ணீரை முற்றுமாக எடுத்துவிட்ட பின்னரும் மீண்டும் அதில் நீர் நிரம்பியதாகக் கூறினார்.
அந்தக் கிராமத்தின் தலையாரியான இந்தர் சிங்கை சந்தித்தோம். அவர், இந்தச் சிலை மிகப் பழமையானது என்று கூறனார். எந்த அளவிற்கு பழமைவாய்ந்தது என்றால், அது மகாபாரதக் காலத்தைச் சேர்ந்தது என்றும் கூறினார்.
மகாபாரதத்தில் கர்ணன் வணங்கிய கர்ணாவதி இவர்தான் என்றும், கர்ணாவதி ஒவ்வொரு நாளும் அளித்த தங்கக் கொடையில்தான் ஏழைகளையும், தன்னை நாடி வந்தவர்களுக்கும் கர்ணன் வாரி வழங்கியதாகக் கூறினார்.
|
உஜ்ஜைன் நகரை ஆண்ட விக்ரமாதித்தன், கர்ணாவதியை ஒவ்வொரு நாளும் வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. நாங்கள் சிறிது நேரம் அங்கிருந்தோம். அம்மனின் சிலையை வழிபட்டவர்களுக்கு அந்தப் பூசாரி புனித நீரை வழங்கினார். அவர் எடுக்க எடுக்க தண்ணீர் வற்றாமல் நிரம்பிக் கொண்டே இருந்தது.
அங்கு வந்த பக்தர்களில் ஒருவரான பண்டிட் சுரேந்திர மேத்தா என்பவர், இச்சிலையும், கோயிலும் சுயம்புவாகத் தோன்றியது என்று கூறினார். தனது பக்தர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க நினைத்த கரேடி மா, இப்படி புனித நீரை அளிப்பதாக சில பக்தர்கள் கூறினர்.
அந்தச் சிலை பூமியில் மிக அழமாக பதிக்கப்பட்டுள்ளதால், பூமிக்குள் ஏற்படும் புவியியல் மாற்றங்கள் காரணமாக இப்படி நிகழலாம் என்று சிலர் கூறுகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், எங்களுக்கு எழுதுங்கள்.
