நாக்கை அறுத்து காணிக்கை!
|
நம்பினால் நம்புங்கள் தொடரில் இந்த வாரம் சக்தி வழிபாட்டில் சில பக்தர்கள் தங்களுடைய உடலை வறுத்திக் கொள்வதையும், அசாதாரணமான செயல்களில் ஈடுபடுவதையும் தங்களது பார்வைக்கு கொண்டு வருகின்றோம்.
சக்தியை வழிபடும்போது பக்தியில் தீவிரம் அதிகமாக இருப்பது சாதாரணமானதே என்றாலும், நவராத்திரி விழாவின்போது அது அந்த எல்லைகளை மீறிவிடுகிறது.
|
முதலில், மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள துர்கா கோயிலுக்குச் செல்வோம். இந்தக் கோயிலில் உள்ள சக்தி மாதா அங்குள்ள பூசாரியின் உடலுக்குள் இறங்குவதாக கூறப்படுகிறது.
நாங்கள் அங்கே போயிருந்தபோது, அக்கோயிலில் கண்ட காட்சி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தங்களது கைகளில் வாளை ஏந்திக் கொண்டு வாயில் கற்பூரம் எரிய பக்தர்களுக்கு இடையே அந்த பூசாரி குதித்துக் கொண்டிருந்தார். அவரை துர்கா மாதாவின் அவதாரமாகவே நினைத்து பக்தர்கள் வழிபட்டனர். அவர்களில் சிலர் வணிகர்கள். மற்ற சிலர் அரசு ஊழியர்கள். எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் அங்கே இருந்தனர்.
இப்படி அம்மன் சக்தி தன்னுள் இறங்குவதாகக் கூறும் பூசாரி சுரேஷ் பாபாவிடம் பேசினோம். தனது உடலில் துர்கா மாதாவின் சக்தி இறங்குவதாகவும் இது பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் கூறினார்.
|
|
இப்படிப்பட்ட நிகழ்வுகள் மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சிலர் தங்களை துர்கா அம்மனின் அவதாரமாக நம்புகின்றனர். மேலும் சிலர் மாகாளி தங்களுக்குள் இருப்பதாக சொல்கின்றனர்.
இதனால் வழிபாடு என்பது மிக அபாயகரமான வடிவத்திற்கு மாறிவிடுகிறது. பக்தியினால் சாமியாடும் இந்த பக்தர்கள் இங்கு ரத்தத்தை தாங்கள் வணங்கும் தெய்வத்திற்கு காணிக்கையாக்குகின்றனர்.
| |
|
மனோகர் ஸ்வரூப் என்ற பக்தர், தனது நாக்கை மாகாளிக்கு அளிக்கின்றார். 12 ஆண்டுகளாக தனக்கு குழந்தை பிறக்காத நிலையில் இங்கு வந்த மனோகர் ஸ்வரூப், மா ஆந்திரியிடம் தனக்கு பிள்ளை வரம் அளித்தால் நாக்கை அறுத்து காணிக்கை அளிப்பதாக வேண்டிக் கொண்டார். அதன்படியே அவருக்கு குழந்தை பிறந்தது. எனவே தனது வேண்டுதலை நிறைவேற்ற அவர் இங்கு வந்துள்ளார் என்று அவரது சகோதரர் கூறினார்.
எங்களது கண்ணிற்கு முன் தனது நாக்கை அறுத்து மனோகர் ஸ்வரூப் காணிக்கையாக்கினார். இவரைப் போலவே மேலும் பலர் நாக்கை அறுத்து காணிக்கையாக்கினர்.
|
மா ஆந்திரி மாதாவிற்கு இப்படி நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தும் காட்சியைக் கண்ட நாங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தோம். இந்த காட்சி எங்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பியது. தங்களது உடலை வறுத்திக் கொள்வதால் மா துர்காவை திருப்தி செய்ய முடியுமா? அப்படிப்பட்ட நடவடிக்கையால் அவர்கள் நினைத்தது நிறைவேறுமா? சாமியாடுகிறார்களே அவர்களது உடலுக்குள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி இறங்குகிறதா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் எங்களுக்கு பதில் கிட்டவில்லை.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... எங்களுக்கு எழுதுங்கள்.
