தீராத நோய்கள் : பிரம்ம சக்தி சிகிச்சை!
|
மிகக் கொடுமையான வியாதிகளைக் கூட தனது விரல்களால் தொடுவதன் மூலமும், நோய்வாய் பட்டவர்கள் உடலின் மீது சில சக்திகளை செலுத்துவதன் மூலமும் குணப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவரை நாம் சந்திக்கப் போகின்றோம்.
இந்த சிகிச்சை முறைக்குப் பெயர் பிரம்ம ஞானம், அதாவது பிரபஞ்ச சக்தி. கேரளாவில் உள்ள இடத்தில் தொடுவதால் வியாதிகளை குணப்படுத்தும் பிரம்ம குரு எம்.டி. ரவி மாஸ்டர் என்பவரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர் இலவசமாகவே சிகிச்சை செய்கிறார்.
எம்.டி. ரவி மாஸ்டர் மருத்துவர் அல்ல. ஒரு தையல்காரர். அடிப்படை கல்வி கூட கற்காதவர். முன் பிறவி பாவங்களால்தான் எல்லா வியாதிகளும், கஷ்டங்களும் மனிதனுக்கு வருவதாகக் கூறுகின்றார். தன்னுடைய உடல் எல்லையை கடந்து சென்று இறையை எட்டுவதன் மூலம் ஒரு மனிதன் தனக்குள்ள எல்லா வியாதிகளில் இருந்தும் குணம் காண முடியும் என்கிறார்.
|
|
சங்கனாசேரியில் உள்ள பிரம்ம கிசிச்சை கேந்திரம் எனும் ஆசிரமத்தில்தான் இவர் இச்சிகிச்சையை அளிக்கின்றார். அங்கு இவருடைய சிகிச்சைக்காக ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். மன நோயிலிருந்து உடல் நோய் உள்ளவர்கள் வரை ரவி மாஸ்டரிடம் சிகிச்சை பெற வந்துள்ளனர். இந்த ஆசிரமத்தில் கடவுள் என்று வணங்குவதற்கு ஏதுமில்லை. ஈஸ்வரன், அல்லா, ஏசு ஆகியோரைத் தாண்டியதே பிரபஞ்ச சக்தி. அதாவது பிரம்ம சக்தி என்று நம்பப்படுகிறது.
|
ரவி மாஸ்டர் பிரம்ம குருவானது எப்படி?
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள திருவாஞ்சூரில் 1953 ஆம் ஆண்டு ரவி மாஸ்டர் பிறந்தார். சிறுவனாய் இருந்தபோதே எதிர்காலத்தை இவர் கணித்துக் கூறுவது உண்மையாவதைக் கண்டவர்கள் ஆச்சரியப்பட்டனர். வளர்ந்த பிறகு ஒரு தையல்காரராக தனது வாழ்க்கையைத் துவக்கிய ரவி மாஸ்டர், அதில் நிபுணராக உள்ளார்.
கிறித்தவ பெண் ஒரு வரை மணந்துகொண்ட ரவி மாஸ்டருக்கு 1986 ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தான். அக்குழந்தை பிறக்கும் போது 750 கிராம் எடை மட்டுமே இருந்தது. அந்தக் குழந்தைக்கு பார்வை இல்லாததும், அதனால் நடக்க இயலாததும் பிறகு தெரியவந்தது. அதனை பல மருத்துவர்களிடம் கொண்டு சென்று சிகிச்சை செய்தனர். ஆனால் எந்த நவீன மருத்துவமும் பயனளிக்கவில்லை. ஒரே ஒரு வழிதான் இருந்தது. இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே.
1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரார்த்தனை செய்வதற்காக ரவி மாஸ்டர் விளக்கை ஏற்ற எத்தனித்தபோது, மின்னலைப் போன்றதொரு ஒரு ஒளி மேலிருந்து அவருடைய உடம்பிற்குள் இடியைப் போல் இறங்கியது. தான் ஏற்றுவதற்காக இருந்த விளக்கு அந்த ஒளியினால் ஏற்றப்பட்டிருந்ததைக் கண்ட ரவி மாஸ்டர் ஆச்சரியமடைந்தார்.
அப்பொழுது அவருடைய காதில் ஒரு மென்மையான குரல் ஒலித்தது. அச்சப்படவோ, குழப்பமடையவோ வேண்டாம் என்று கூறியது. நானே பிரம்மம். உயிர் சக்தியும், இந்தப் பிரபஞ்சபத்தை உருவாக்கியவனகும் ஆகும். நான் உன்னுள் நுழைந்திருக்கிறேன். உன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் நோய்களில் இருந்து விடுபட்டு வாழ்க்கையில் அமைதி பெறுவார்கள். உனது மகனைப் பற்றி நீ கவலைப்படாதே. அவனுக்கு பார்வையும், நடையும் நான்கு நாட்களில் கிட்டும் என்று அக்குரல் மேலும் கூறியது.
முதலில் இதனை ஒரு கனவாகத்தான் ரவி மாஸ்டர் நினைத்துள்ளார். ஆனால், அக்குரல் கூறியபடியே 4வது நாள் தன் கண் முன்னே தனது மகன் நடப்பதைக் கண்டு பிரம்மன் தன்னுள் இறங்கியிருப்பதை அறிந்தார். அதன் பிறகு அவருடைய மகனுக்கு கண் பார்வையும் கிடைத்தது. அந்த நாள் முதல் பிரம்ம ஒளியால் ஏற்றப்பட்ட அந்த விளக்கில் இருந்து கிட்டும் வழிகாட்டுதலின் படியே ரவி மாஸ்டர் எல்லாவற்றையும் செய்து வருகிறார்.
|
பிரம்ம தீர்த்தம்!
|
பிரம்ம தீர்த்தத்தை அங்குள்ள அனைவருக்கும் வழங்குகிறார். பிரம்ம தீர்த்தத்தை அருந்துவோரின் ஜீவன் தூய்மையடைந்து அவர்கள் முழுமையான மனிதர்களாகின்றனர். நோய்களில் இருந்தும் விடுதலை பெறுகின்றனர்.
சிலர் மரணமடையும் போது அவர்களுடைய ஜீவன் நரகத்தின் எதிர் சக்தி பிடித்துக் கொள்ளும் என்றும், மற்றவை சந்திர மண்டலம் என்றழைக்கப்படும் மோட்சத்திற்கு சென்றுவிடும் என்றும் கூறும் பிரம்ம குரு ரவி மாஸ்டர் இந்த பிரம்ம தீர்த்தத்தை அருந்துவோர் மரணமடையும் போது அவர்களுடைய ஜீவன் எந்த எதிர்சக்தி பிடியிலும் சிக்காமலிருக்க அவருடைய உறவினர்கள் எந்தவிதமான கிரியையோ அல்லது பூஜையையோ செய்யத் தேவையில்லை என்றும், அவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்றும் கூறுகிறார்.
|
சிலர் இச்சிகிச்சையை மாற்று மருத்துவம் என்று கூறுகின்றனர். இப்படி விரலால் தொடுவதாலும், தீர்த்தத்தை அருந்துவதாலும் நோய்களை குணப்படுத்த முடியும் என்று நம்புகிறீர்களா? உங்கள் கருத்தென்ன எங்களுக்கு எழுதுங்கள்.
