பாம்புக் கடி விஷத்தை தொலைபேசியிலேயே முறிக்கும் அதிசயம்!
|
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த அதிசயத்தை நிகழ்த்துவதாக கூறும் ஒரு நபரை நாம் சந்திக்கப் போகிறோம்.
சிரிக்கவேண்டாம்... இது ஒரு உண்மைச் சம்பவம்... நாங்கள் கேள்விப்பட்ட இந்த செய்தி உண்மையா என்பதை அறிய, இந்தோர் நகரிலுள்ள ராம்பாக் காலனியை நோக்கி எங்கள் பயணம் துவங்கியது.
அந்த நபர் இருக்கும் இடத்தை அடைந்தோம். அந்த பகுதியின் காவல் நிலையத்தில் அந்த நபர் பணியாற்றுவதாக கேள்விப்பட்டு அங்கு சென்றோம். அவர் ஒரு ஹெட் கான்ஸ்டபிள் என்பதும், அவர்தான் பாம்புக் கடிக்கு தொலைபேசி மருத்ததுவர் என்பதும் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த அதிசய மனிதர் பெயர் யஷ்வந் பகவத். பாம்புக் கடிக்கு தொலைபேசி வாயிலாகவே மருத்துவம் செய்யும் முறையை விளக்கினார். அதாவது தொலைபேசியில் இது போன்று பாம்புக்கடி அழைப்புகள் வந்தால் ஒரு சமஸ்கிருத மந்திரத்தை முணுமுணுப்பாராம்... அது பாம்புக் கடிக்கென்றே உள்ள சமஸ்கிருத ஸ்லோகமாம்.
|
|
ஆனால் இந்த சிகிச்சைக்கு ஒரு ரூபாய் கூட காசு வாங்குவதில்லையாம் பகவத். எல்லாம் அந்த சாய்பாபாவின் அருள் என்றே கருதுகிறாராம்.
நிறையபேர் இதுபோன்ற தொலைபேசி சிகிச்சையை அவரிடம் பெற்றுள்ளனராம். நாக பஞ்சமி தினத்தன்று ரத்தப் போக்கு, மூலம், மஞ்சள் காமாலை ஆகியவற்றையும் இவர் குணப்படுத்துகிறாராம். ஆயினும் பாம்புக் கடி பகவத்ஜி என்றால்தான் இங்கு அவரை அடையாளம் காட்டுகின்றனர்.
|
இதைப் பற்றி உண்மையை அறிய வேண்டுமா? 0731-2535534 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.
எப்படி இந்த சிகிச்சை துவங்கியது?
தனது சிறு வயதில், தன் தாயிடமிருந்து மூலிகைகளின் பயன்களை அறிந்ததாகவும், நூர் கான் சாஹப் என்ற மாந்திரிகரிடமிருந்துதான் இந்த மந்திரங்களைக் கற்றதாகவும், கடந்த 25 ஆண்டுகளாக இன்னமும் இதனை தான் நம்பிக்கையுடன் செய்து வருவதாகவும் யஷ்வந்த் பகவத் தெரிவித்தார்
