தாராள மனசும், தயவு தாட்சண்யமும் உடைய நீங்கள், பகைவர்க்கும் உதவுவீர்கள். இதுவரை அஷ்டமத்தில் நின்று கொண்டு எல்லோரிடமும் கெட்ட பெயர் வாங்கித் தந்து, பல பிரச்சனைகளில் சிக்க வைத்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் 9-ம் வீட்டில் அமர்வதால் நமக்கேன் வம்பு என்று ஓரமாய் ஒதுங்கியிருந்த நீங்கள், இனி எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். தோல்வி பயத்தால் துவண்டு இருந்த உங்கள் மனதில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை துளிர்விடும். உங்கள் ராசிநாதன் யோக வீட்டில் வலுவாக அமர்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். | Sani Peyarchi Rasi Palan, Kumbam Sani Peyarchi Palan