வித்தியாசம் பார்க்காமல் எல்லோர்க்கும் உதவுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உத்தியோகத்தில் பிரச்னைகளையும், புதிய முயற்சிகளில் தடைகளையும் தந்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். இதுவரை எந்த வேலையை எடுத்தாலும் முழு மன நிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்தாரே! உழைப்பு உங்களிடத்தில் இருந்து, உயர்வு மற்றொருவருக்குப் போனதே! பணம், காசு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவுகளும் துரத்தியதே! | Sani Peyarchi Rasi Palan, Dhanusu Sani Peyarchi Palan