தலைமைப் பண்பு அதிகம் உள்ள நீங்கள், தராதரம் அறிந்து பழகுபவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பேச்சால் பல பிரச்னைகளில் சிக்க வைத்து உங்களை கேளிக்கையாக்கிய சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்களை விட்டு விலகி 3-ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். முதல் முயற்சியிலேயே எல்லாக் காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். | Sani Peyarchi Rasi Palan, Simmam Sani Peyarchi Palan