1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. எ‌ண் ஜோ‌திட‌ம்
  6. நவ‌ம்ப‌‌ர் மாத எண் ஜோதிடம் : 9, 18, 27

2011 November Month Numerology | நவ‌ம்ப‌‌ர் மாத எண் ஜோதிடம் : 9, 18, 27

நவம்பர் மாத எண் ஜோதிடம் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும்.

எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பேசாமல் இருந்த உறவினர் வலிய வந்துப் பேசுவார். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அவ்வப்போது தூக்கமின்மை, திடீர் பயணங்கள் வந்து செல்லும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.

வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உத்‌தியோகத்தில் உங்களின் பரந்த மனசை மூத்த அதிகாரி புரிந்துக் கொண்டு உதவுவார். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! பழைய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். நாவான்மையால் வெல்லும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 6, 9, 14, 15, 23, 24
அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 7
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, புதன்
About Writer
Webdunia