1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 16 மே 2014 (11:50 IST)

திமுக மோசமான பின்னடைவு: மு.க.அழகிரி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

திமுக மோசமான பின்னடைவை சந்தித்திருப்பதால் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.
 
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், திமுக மோசமான பின்னடைவை சந்தித்து வருவதால், மதுரையில் திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.
 
சத்யசாய் நகரில் உள்ள அழகிரி வீட்டின் முன் எல்.சி.டி டிவி பெரிய திரையில் வைக்கப்பட்டிருந்தது. அழகிரி ஆதரவாளர்கள் காலையில் வீட்டின் முன் குவிந்தனர். அவர்கள் திமுகவின் பின்னடைவ் குறித்த செய்தியைக் கேட்டு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர். அழகிரியைப் புறக்கணித்ததால் திமுக பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
 
 
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள: www.elections.webdunia.com
 
LIVE Tamilnadu Lok Sabha 2014 Election Results
LIVE Lok Sabha 2014 Election Results