திமுக சார்பில் ஆ.ராசா போட்டியிடும் நீலகிரி தொகுதியில் நோட்டா 3 ஆவது இடத்தில் உள்ளது.
நீலகிரி மக்களவைத் தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 26,247 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் ராசா 19,685 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக 7562 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. இங்கு காங்கிரஸ் வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று, நோட்டா 2225 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.