வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 29 ஜூலை 2021 (12:08 IST)

9 - 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடைபெறுகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. 

 
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திற்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பலர் கூறிவரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்த ஆலோசனை தொடங்கியது.
 
முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பள்ளிகள் திறப்பு குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.