வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : வியாழன், 30 மார்ச் 2017 (09:35 IST)

இந்தியாவில் யாரும் செய்யாததை நாங்கள் செய்வோம் - மாஃபா பாண்டியராஜன்

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக அதிமுக தினகரன் அணி, ஓபிஎஸ் அணி மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது



 


இந்த நிலையில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக நேற்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசிய்தாவது: நாளை காலை 10 மணிக்கு எங்கள் அணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இந்த அறிக்கையில் இதுவரை இந்தியாவில் யாரும் தயாரித்திடாத அளவிற்கு சிறப்பம்சங்கள் இருக்கும். இந்த இடைத்தேர்தலில் எங்கள் எதிரி திமுக மட்டுமே. எனவே அந்த கட்சியை எதிர்த்து எங்கள் பிரச்சாரம் இருக்கும்.

ஓ.பி.எஸ்க்கு எதிராக மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். தமிழக மக்களிடையே ஓ.பி.எஸ்க்கு ஆதரவு பெருகுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல்,ஸ்டாலின் இப்படி பேசி வருகிறார். அவருக்கு தக்க பதிலடி கொடுப்போம்.

பாஜக அழுத்தம் கொடுத்ததால்,ஓ.பி.எஸ் தமிழக முதல்வராக நியமிக்கப்பட்டார் என்பது தவறு. அன்றைய சூழலில் ஓ.பி.எஸ் தவிர வேறு தகுதி வாய்ந்த நபர்கள் இல்லை