திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2016 (16:17 IST)

நாங்கள் வளர்ந்து வரும் கட்சிதான் - ஒப்புக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன்

நாங்கள் தேசிய கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியாக இருக்கிறோம் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

 

நடந்து முடிந்த தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. இதில், போட்டியிட்ட பாஜக தோல்வியை தழுவியது.

தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தர்ராஜன், ”சட்டமன்ற இடைத்தேர்தல் என்றலே ஆளுங்கட்சிக்கு சாகதமாக அமைந்துவிடும் என்பது சட்ட விதிகளாகவே உள்ளது. இதனை மாற்றுவதற்காகவே, பாஜக இடைத் தேர்தலில் போட்டியிட்டது.

ஆனால், 4 தொகுதியிலும் பணப்பட்டுவாடா அதிகளவில் நடந்தது. இதனால், நாங்கள் தோல்வியடைந்தோம். வளர்ந்து வரும் கட்சிகளை தோற்கடிப்பது, ஆளுங்கட்சியின் வேலையாகவே இருக்கும். அதேபோலதான் நாங்கள் தேசிய கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியாக இருக்கிறோம்.

எத்தனை தடைகள் வந்தாலும், அதை தடுத்தெறிந்து வெற்றி பெற வேண்டும் என உறுதியாக போட்டியிட்டோம். ஆனால், பணப்பட்டுவாடா செய்து, எங்கள் வெற்றியை பறித்து விட்டனர். பணப்பட்டுவாடா செய்யாமல் இருந்தால், பாஜக நிச்சயம் வெற்றி பெற்று இருக்கும்” என்று கூறியுள்ளார்.