எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!
எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்...
அம்பேத்கர்... அம்பேத்கர்...
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும் மகிழ
உச்சரித்துக் கொண்டே இருப்போம்.
எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva