வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 1 ஜனவரி 2023 (13:20 IST)

புத்தாண்டில்தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்: உற்சாக வரவேற்பு!

vijayakanth
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் முக்கியமான தினங்களில் மட்டும்  தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
 
கடந்த தீபாவளி தினத்தில் அவர் தொண்டர்களை சந்தித்த நிலையில்தான் இன்று புத்தாண்டை முன்னிட்டு அவர் மீண்டும் தொண்டர்களை சந்தித்து உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜயகாந்த் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை நோக்கி கையசைத்த போது அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது
 
மேலும் விஜயகாந்த் வாழ்க, கேப்டன் வாழ்க என தொண்டர்கள் கரகோஷத்தை ரசித்த விஜயகாந்த் விரைவில் மீண்டும் தொண்டர்களை சந்திப்பேன் என்று கூறினார். மருத்துவரின் ஆலோசனைப்படி ஆலோசனைப்படி விஜயகாந்த் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்ற நிலையில் முக்கிய தினங்களில் மட்டும் தொண்டர்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva