விஜய்யின் அரசியல் வருகையால் சீமானுக்கு அச்சம்: கார்த்தி சிதம்பரம்..!
விஜய்யின் அரசியல் வருகை சீமானுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, "சீமான் கட்சிக்கு நிரந்தர வாக்குகள் கிடையாது; அதனால், அவருக்கு விஜய்யின் அரசியல் வருகை யதார்த்தமான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது" என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், விஜய் தனது கொள்கைகளை இன்னும் தெளிவாக வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், "அவரது மாநாட்டில் உத்வேகம் இருந்தது, ஆனால் அது ஒரு அமைப்பாக மாறி தேர்தலை சந்திக்கும் அளவுக்கு இருக்குமா என்பதற்கு காலம் தான் பதிலளிக்கும்" என்றும் தெரிவித்தார்.
"அரசியலைப் பொறுத்தவரை சாதுரியமான முடிவு எடுக்க வேண்டும்; விஜய் கட்சியினர் சாதுரியமாக முடிவெடுப்பார்களா அல்லது பிம்பத்தின் அடிப்படையில் முடிவெடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அரசியல் கட்சியின் செயல்பாடு, நடத்தை, கொள்கை போக போக தான் தெளிவாக தெரியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
Edited by Siva