விஜய், இந்தியாவின் முக்கியமான நடிகர்- அண்ணாமலை
தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், அவர் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, நடிகர் விஜய்யின் புகைப்படத்தக் காண்பித்து அவரைப் பற்றி கூறும்படி கேட்டுக் கொண்டனர்.
இதற்கு அண்ணாமலை இவரது முதல் படத்தைப் பார்த்திருக்கிறேன். அதில் நடிக்கத் தெரியாது. நடனமாடத் தெரியாது அவருக்கு…ஆனால், இன்றைக்கு இந்தியாவினுடைய முக்கியமான நடிகர் விஜயைப் பாராட்டினார்.
ஒரு மனிதன் தன் சுய முயற்சியில் கடின உழைப்பில் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு சினிமாவை பொருத்தவரை நடிகர் விஜய் ஒரு உதாரணம் என்று கூறினார்.
மேலும், அவரது முதல் படம் எனக்கு ஞாபகம் இருக்கு..அவர் கேமரா முன் நிற்பதற்கு கூச்சப்பட்டார். நாமெல்லாம் இருக்கிற மாதிரி. இன்று அதெல்லாம் தாண்டி இன்று ஒரு மெகா ஸ்டாராக உருவாகியுள்ளார் என்பது எளிதான பயணமல்ல. இன்று சமுதாய விஸயங்களைப் பேசியுள்ளார். இன்னும் ஆழமாக தீர்க்கமாக நிறைய பேச வேண்டுமென்பது எங்களைப் போன்றோரின் எதிர்பார்ப்பு என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.