செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2023 (16:30 IST)

''ஊரே வியக்கும் சீர்வரிசை''- நண்பரின் இல்ல விழாவில் சக நண்பர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

madurai
மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே  நண்பரின் இல்ல காதணி விழாவுக்காக, சக நண்பர்கள் சீர்வரிசை பொருட்களுடன் வந்த சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிபட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். இவரது மனைவி லதா.  இவர்களின் குழந்தைகளுக்கு காதணி விழா வைத்தனர். இதற்காக ஊர் முழுவதும் உள்ள அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து, அவரது உறவினர்களின் சீர்வரிசையயை மிஞ்சும் வகையில்,  கார்த்திக், சேதுராமன், நாகராஜன், செல்வபாண்டி, மதன் மற்றும் திருமுருகன் உள்ளிட்டோர் தடபுடலாக சீர்வரிசைகளுடன் மேளதாளம், பொய்க்கால் குதிரை ஆகியவற்றுடன் வீட்டிற்கு சென்றனர். மேலும், 500கிலோ கொண்ட ராட்சத மாலையை கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அத்துடன் ஜல்லிக்கட்டு காளை மற்றும் கிடாய்களை சீர்வரிசையாக கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.