வியாழன், 9 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 4 ஜூலை 2020 (11:52 IST)

தலைமை தாங்கி ஒரு வருடம் நிறைவு: மாஸ் காட்டும் உதயநிதியின் விழுதுகள்!

தலைமை தாங்கி ஒரு வருடம் நிறைவு: மாஸ் காட்டும் உதயநிதியின் விழுதுகள்!
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #உதயநிதி_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 
 
திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பெருப்பேற்று இன்ரோடு ஒரு ஆண்டு ஆகிறதாம். இதனை கொண்டாடும் விதமாக கழகத்தினர் #உதயநிதி_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். 
 
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் தலைவர் பொறுப்பை அவரது மகன் முக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில்,  இதனைத்தொடர்ந்து முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி கிடைத்தது.
 
இது குறித்து கட்சிக்குள் மறைமுகமாகவும், சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவும் விமர்சனங்கள் அப்போதே எழுந்தது. திமுக வாரிசு அரசியலை மையப்படுத்தி செயல்படுவதாகவும், கட்சியின் அடிமட்டத்தில் இருந்து தொண்டு செய்து வந்தவர்களுக்கு எந்தவித பதவியும் கொடுக்காமல், ஸ்டாலின் மகன் என்ற ஒரே தகுதியை வைத்து உதயநிதிக்கு பதவி கொடுத்துள்ளதாகவும் உதயநிதி மீது பல விமர்சங்கள் எழுந்தது. 
தலைமை தாங்கி ஒரு வருடம் நிறைவு: மாஸ் காட்டும் உதயநிதியின் விழுதுகள்!
ஆனால், அவர் விமர்சங்களை கண்டு துவண்டுபோகாமல் செயலில் தனது திறனை வெளிப்படுத்த துவங்கினார். அப்போது முதல் இப்போது வரை அரசியல் ரீதியாக உதயநிதி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அவர் மீது எழுந்த விமர்சனங்களுக்கு செயல்கள் மூலம் பதில் அளித்து வருகிறார். 
 
தற்போது இளைஞர் அணியில் அனைவரும் விரும்படுபவராய், பந்தா இல்லாமல் சகஜமாக பழகக் கூடியவராய் இருக்கும் இவர் மேலும் அரசியலில் பல மைல் கட் நகரவேண்டும் என டிவிட்டரில் கழகத்தினர் வாழ்த்தி வருகின்றனர்.