1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (11:59 IST)

அமைச்சரான பின் உதயநிதியின் முதல் கையெழுத்து என்ன தெரியுமா?

stalin, udhayanidhi
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன 
 
விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியத்தை உதவி வழங்குவதற்கான கோப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். இதுவரை விளையாட்டு வீரர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது இரு மடங்கு அதாவது 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கோப்பில்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக இளைஞர் அணி தலைவராகவும் எம்எல்ஏவாக பதவி ஏற்றபோது வாரிசு அரசியல் என விமர்சனம் வந்தது என்றும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கும் என்றும் அதற்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் கொடுப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran