நீட் தேவையா? வேண்டாமா?, அனிதாவா? காய்கறி விற்ற மாணவர்களா?, எது சரி? எது தவறு?
ஒரு பக்கம் அரியலூர் மாணவி 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறாததால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காமல் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மாணவர்களிடையே நீட் எதிர்ப்பு போராட்டம் வலுத்துள்ளது. அரசியல் கட்சிகளும், ஒருசில அமைப்புகளும் இந்த போராட்டத்தை ஆதரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளாட்பாரத்தில் காய்கறி விற்கும் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றதால் செங்கல்பட்டு மெடிக்கல் கல்லூரியில் மருத்துவம் படிக்க சீட் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் இன்று மெடிக்கல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
எனவே நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதில் மாணவர்களிடையே தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே உண்மையில் என்ன நடக்கின்றது? நீட் அவசியமா? அவசியம் என்றால் அதற்கு தயாராகுவது எப்படி? என்பது குறித்து கல்வியாளர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.