1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 29 மார்ச் 2017 (13:26 IST)

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரன்: ஆர்கே நகரில் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரன்: ஆர்கே நகரில் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஜெயலலிதா மறைந்ததை அடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளை சேர்ந்த டிடிவி தினகரன் மற்றும் மதுசூதனன், திமுகவை சேர்ந்த மருத்துகணேஷ் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட 62 பேர் போட்டியிடுகின்றனர்.


 
 
இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இவர்கள் இருப்பதால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து அந்த கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார்.
 
ஆர்கே நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணி மக்கள் அணி. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து அந்நிய செலவாணி வழக்கு குற்றவாளி தான் டிடிவி தினகரன். ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர் தான் டிடிவி தினகரன் என அதிரடியாக பிரச்சாரம் செய்தார்.