1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (07:35 IST)

ஒகேனக்கல் அருவியில் அதீத நீர்வரத்து - சுற்றுலா பயணிகளுக்கு தடா!

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பதாக ஆட்சியர் அறிவிப்பு.  

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது போல் சுற்றுலா பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. னக்கல் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்துதை அடுத்து ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. 
 
இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள உள்ளூர் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சியை அளித்தது என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தற்போது ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆம், அங்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவில் குளிக்க  சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 
அதோடு நீர்வரத்து 16,000 கன அடியாக உயர்ந்துள்ளதால் மறு உத்தரவு வரும் வரை பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.