செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இன்று தமிழர் திருநாள், பொங்கல் திருநாள்: புத்தாடை உடுத்தி கொண்டாட்டம்!

ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளை பொங்கல் திருநாளாக தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று தை முதல் நாளை அடுத்து தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
 
தமிழகத்தில் உள்ள பொது பொது மக்கள் புத்தாடை உடுத்தி புதுப்பானையில் அதிகாலையிலேயே பொங்கலிட்டு தைத்திருநாளை தமிழர்கள் வரவேற்க வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் இன்றைய பொங்கல் திருநாளை கோலாகலமாக கொண்டாடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இன்றைய பொங்கல் திருநாள் அனைவருக்கும் நல்ல நாளாக இருக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக இருக்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும், ஆன்மீகத் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.