புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 22 மார்ச் 2020 (17:11 IST)

சரியாக ஐந்து மணிக்கு கைதட்டி நன்றி தெரிவித்தார் முதல்வர் பழனிச்சாமி

கைதட்டி நன்றி தெரிவித்தார் முதல்வர் பழனிச்சாமி
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக உயிரையும் பொருட்படுத்தாது இரவு பகலாக பணி புரிந்துவரும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வந்து கைதட்டி ஆதரவு தெரிவிக்க வேண்டுமென பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சரியாக இன்று மாலை 5 மணிக்கு கொரோனா வைரஸை எதிர்த்து போராடிவரும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கைதட்டி நன்றி தெரிவித்தார். அவரை அடுத்து தமிழக அமைச்சர்களும் கைதட்டி நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் உள்ள பொதுமக்களும் தங்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து கைதட்டி நன்றி தெரிவித்தனர். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தன்னலமற்று பணியாற்றுவோர்களுக்கு கைதட்டி மக்கள் பாராட்டி வருவது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது