1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheeesh
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2016 (00:26 IST)

முதல்வர் ஜெயலலிதா காலமானார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார் என்று அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


 

 
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நிலை பாதிப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 74 நாட்களாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
 
டிசம்பர் 4ஆம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. அதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தது. இந்நிலையில் தற்போது நேற்று 11.30 மணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்று அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.