1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (15:32 IST)

இவன தூக்கி கொரோனா ஆம்புலன்ஸ்ல போடுங்க! – இளைஞர்களை டரியல் செய்த போலீஸ்! #WebViral

ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றும் இளைஞர்களை தண்டிக்க திருப்பூர் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் சமீபத்தையை “கொரோனா ஆம்புலன்ஸ்” திட்டம் வைரலாகி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் அதை மதியாமல் வெளியே சுற்றும் இளைஞர்களை கட்டுப்படுத்துவது என்பது காவல்துறைக்கு சவாலான பணியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் எடுத்து வரும் சில நடவடிக்கைகள் ஊர் சுற்றும் இளைஞர்களுக்கு பீதியை ஏற்படுத்தும் அதேசமயம் வீட்டில் இருப்பவர்களுக்கும் சிறந்த பொழுதுபோக்காக மாறி வருகிறது. சமீபத்தில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டதும், ட்ரோனை பார்த்து கேரம் போர்டு விளையாடிய இளைஞர்கள் தெறித்து ஓடிய வீடியோ அனைவருக்கும் நினைவிருக்கும். அதற்கு நிகரான அடுத்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் திருப்பூர் போலீஸார்.

ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றிய இளைஞர்களை பிடித்து, அருகே உள்ள ஆம்புலன்ஸில் கொரோனா நோயாளி ஒருவர் இருப்பதாகவும், அதில் சென்று அமருமாறும் கூறுகின்றனர். அதை கேட்டதும் பதறியடித்து ஓட முயலும் இளைஞர்களை வலுகட்டாயமாக பிடித்து ஆம்புலன்ஸிற்குள் விட, அங்கு கொரோனா தடுப்பு உடைகளை அணிந்து கொண்டு தயாராக இருக்கும் ஆள் அவர்களை நெருங்க, டரியல் ஆன இளைஞர்கள் ஆம்புலன்ஸ் கண்ணாடி வழியாக குதிக்க முயற்சிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் ட்ரெண்டாகி உள்ளது.

வீடியோவை காண….