1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஏப்ரல் 2023 (13:57 IST)

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் ஐசியுவில் அனுமதி: அதிர்ச்சி தகவல்..!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவான ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதன் குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து பொது இடங்களில் செல்லும் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்து வருகிறது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மதுரை திண்டுக்கல் கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் தலா மூன்று பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நேற்று இரண்டு பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் இன்று மூன்று பேர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran