செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (08:59 IST)

அது பாஜக கூட்டணி அல்ல, பாமக தலைமையிலான கூட்டணி.. திருமாவளவன்

தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அமைந்தது என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும் அந்த கூட்டணியில் அதிக வாக்கு சதவீதம் உள்ள கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்றும் அதனால் அது பாமக கூட்டணி தலைமையிலான கூட்டணி என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் கூட பாஜக, பாமக ஆகிய கட்சிகள் ஒரே கூட்டணியில் இணைந்து தான் தேர்தலை சந்தித்தது என்றும் ஆனால் அந்த கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை என்று கூறிய திருமாவளவன் திமுக கூட்டணி மட்டுமே வெற்றி கூட்டணி என்று தெரிவித்தார்

பாஜக கூட்டணியில் பாமக வாக்கு வங்கி உள்ள கட்சி என்றும், பாஜக தேசிய அளவில் பெரிய கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் அந்த கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்றும் எனவே அதை பாஜக தலைமையிலான கூட்டணி என்று சொல்வதற்கு பதிலாக பாமக தலைமையிலான கூட்டணி என்று சொல்வது தான் சரியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்

மேலும் திமுக கூட்டணியில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்றும் திமுக அணிக்கு போட்டியாக இருப்பது அதிமுக மட்டுமே என்றும் அவர் கூறினார்.

Edited by Siva