ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (09:12 IST)

கலைஞர் பிறந்தநாளை மாநில உரிமைகள் நாளாக அறிவிக்க வேண்டும் – திருமா வளவன் கோரிக்கை!

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் கருணாநிதி பிறந்தநாளை மாநில உரிமைகள் நாளாக அறிவிக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இன்று திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்தநாள் திமுக தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உள்ள நிலையில் தொண்டர்கள் வீடுகளில் இருந்தபடியே கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மரியாதை செய்து பிறந்தநாளை எளிமையாக கொண்டாட முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். கலைஞர் இறந்த பின்னர் திமுக ஆட்சிக்கு வந்து கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால் தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமா வளவன் ‘சூன் 3மாநில உரிமை நாள்: பெரியார், அண்ணா பாசறையில் வளர்ந்தவர். மைய-மாநில அரசுகளின் உறவுகளை ஆராய ஆணையம் நியமித்தவர். மாநில உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்தவர். கூட்டாட்சி கோட்பாட்டுக்கு உயிர்ப்பை அளித்தவர். தமிழக அரசே, கலைஞர் பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிக்கவும்       ’ எனக் கோரிக்கை வைத்துள்ளார்.