புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 ஏப்ரல் 2021 (09:59 IST)

இரவு காட்சிகள் ரத்து.. பகல் காட்சிகள் சேர்ப்பு! – திரையரங்குகள் புதிய அட்டவணை!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் காட்சி நேரத்தை மாற்றியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்குகள் தங்கள் திரையிடல் நேரத்தை மாற்றி தினமும் 4 காட்சிகள் திரையிடுகின்றன. அதன்படி இரவு 10 மணிக்கு ஊரடங்கு தொடங்குவதால் அனைத்து திரையரங்குகளிலும் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் காலை 11 அல்லது 11.30 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் நிலையில் தற்போது முதல் காட்சியை காலை 9 அல்லது 9.30 மணி அளவில் தொடங்கும் விதமாக நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பிறகு 12 மணி சராசரியில் ஒரு காட்சியும், 3 மணி சராசரியில் ஒரு காட்சியும், மாலை 6 மணி காட்சிகளும் என மொத்தம் 4 காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.