புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (17:49 IST)

தேர்தல் அதிகாரி எனக் கூறி நகைகளைத் திருடிய கும்பல்

நகைக்கடை ஊழியரை நூதன முறையில் ஏமாற்றி, கொள்ளையர்கள் அவரிடமிருந்து 9 சவரன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள நகைக் கடையில் பணிபுரிபவர் லக்‌ஷ்மன். இவர் 9 சவரன் நகைகளை ஹால்மார்க் செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தியாகராய நகர் அருகே சென்ற போது அவரை வழிமறித்த ஒரு கும்பல் தங்களை தேர்தல் பறக்கும் படையினர் எனக் கூறி அவரை சோதனை செய்துள்ளனர்.
 
அதன்பிறகு கடைக்குச் சென்ற லக்‌ஷ்மன் பையில் நகை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து மாம்பலம் காவல் நிலையத்திற்கு சென்ற அவர் நடந்தவற்றை போலீஸாரிடம் கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டம் நிறைந்த பகுதியில் கொள்ளையர்கள் தங்களின் கைவைரிசையை காட்டியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.