செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 14 ஜூலை 2016 (16:54 IST)

தனியார் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் தவறி விழுந்து படுகாயம்

கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கட்டிட பணிக்கு ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றிய கூலி தொழிலாளி தவறி விழுந்து படுகாயமடைந்து கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். 


 

 
இதற்கு தனியார் மருத்துவமனையில் அலட்சியப்போக்கே காரணம் என்று புகார் கூறப்பட்டுள்ளது.
 
கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையான அமராவதி மருத்துவமனையின் கட்டிட பணி முடிவுற்று வண்ணப்பூச்சு வேலை நடைபெற்றுக்கொண்டு இருக்கையில் அங்கே ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட  பழையஜெயங்கொண்டத்தை சேர்ந்த  தங்கவேல்(26)
இன்று வண்ணப்பூச்சு வேலை செய்து கொண்டு இருக்கையில் சாரத்தின் மீது ஏறி நான்காவது மாடி சுவற்றில் சுண்ணாம்பு அடித்துக்கொண்டு இருந்தார் . இந்நிலையில் எதிர்பாராத விதமாக சாரம் சரிந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. 
 
மருத்துவமனை வளாகத்தில் இந்த விபத்து நடந்ததால் அங்கேயே தங்கவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் நிலைமை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 
இந்த விபத்திற்க்கான காரணத்தை கரூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சி.ஆனந்த குமார் - கரூர் மாவட்டம்