ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 25 மே 2020 (09:23 IST)

விடைத்தாள் திருத்தும் ஆசியர்களுக்கு இ பாஸ் கிடைப்பதில் சிக்கல்! தமிழக அரசு அதிரடி!

12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பாஸ் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சென்னையை தவிர தமிழகம் முழுவதும் வரும் 27ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இதற்காக செல்லும் ஆசிரியர்கள் இ பாஸ் விண்ணப்பித்தும் இன்னும் அவர்களுக்கானா பாஸ் வரவில்லை.

தேர்வுத்தாள் திருத்தும் பணியில் 2 ஆயிரத்து 315 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு இ பாஸ் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அவர்களது அடையாள அட்டையே போதுமானது என்று அறிவுறுத்தியுள்ளது.