வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (09:22 IST)

தமிழகத்தில் 5 ஆண்டுகள் நஷ்டத்தில் டாஸ்மாக்

தமிழகத்தில் 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 
கொரோனா காரணமாக டாஸ்மாக் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 
2010 - 11ல் ரூ.3.56 கோடி, 2011- 12ல் ரூ. 1.12 கோடி, 2012-13ல் 103.64 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2013-14ல் ரூ.64.44 கோடி, 2019-20 நிதியாண்டில் ரூ.64.44 கோடிக்கு டாஸ்மாக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ஆர்.டி.ஐ. தெரிவித்திருக்கிறது.