மாணவர்கள் வராவிட்டாலும் அட்மிசன் உண்டு! – தமிழக பள்ளிகளில் அட்மிசன் தொடக்கம்!
கொரோனா பாதிப்புகளால் தமிழகத்தில் பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் தேர்வு நடைபெறாத மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ரிசல்ட் வந்துவிட்டதை தொடர்ந்து பள்ளி சேர்க்கை பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அனைத்திலும் 1,6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கான அட்மிசன் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு குழந்தைகள் வராவிட்டாலும் பெற்றோர்களிடம் போதிய ஆவணங்களை பெற்றுக் கொண்டு அட்மிசன் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக நிறையே பேர் அட்மிசனுக்கு வந்தால் காலையில் 20 பேர் மாலையில் 20 பேர் என பிரித்து சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேர்க்கையின் போதே மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்டவற்றை வழங்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.