செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2016 (09:12 IST)

தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை - வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை - வானிலை மையம் அறிவிப்பு

அந்த மான் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப் பெற்றதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல இடங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 

 
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது.
 
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
 
“அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இதையடுத்து, இதையடுத்து, தமிழகத்தில் பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும். 
 
அதேபோல், சென்னையில் சில இடங்களில் வீட்டு விட்டு அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்” என்று அவர் தெரிவித்தார்.