புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 19 ஏப்ரல் 2016 (05:46 IST)

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்துப் போட்டி

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்துப் போட்டி

வரும் சட்ட மன்றத் தேர்தலில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
 

 
அதிமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம் பெற்றிருந்தது. மேலும், அக்கூட்டணியில் தங்களுக்கு 11 தொகுதிகள் கேட்டனர். ஆனால், கடைசிவரை தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு அதிமுக ஒரு இடம் கூடதரவில்லை. இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறியது.
 
இந்நிலையில், சட்ட சபை தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிடும் என்றும்,  நெய்வேலி சட்டசபை தொகுதியில் தாம் போட்டியிட உள்ளதாகவும் அக்கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.