ஜெயலலிதாவுக்கு நன்றி கூறிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்


K.N.Vadivel| Last Updated: செவ்வாய், 12 ஜனவரி 2016 (06:25 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நேரில் நன்றி தெரிவித்தனர். 
 
 
தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக தேவையான சட்டப் பூர்வ நடவடிக்கைகளை விரைந்து எடுகக் வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. மேலும், சில சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.
 
தமிழகத்தில் ஜல்லிக் கட்டு நடத்திட அனுமதி பெற்றுத் தந்தத முதல்வர்  ஜெயலலிதாவுக்கு, தமிழ்நாடு ஜல்லிக் கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகரன் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பில் நேரில் நன்றி தெரிவித்தனர். 


இதில் மேலும் படிக்கவும் :