தமிழக அரசின் இணையதளம் முடக்கம்: தீவிரவாதிகள் கைவரிசை?
தமிழக அரசின் இணையதளம் முடக்கம்: தீவிரவாதிகள் கைவரிசை?
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tn.gov.in என்ற இணையதளம் நேற்று திடீரென முடக்கப்பட்டது. இது பாகிஸ்தான் தீவிர வாதிகளின் கைவரிசை என கூறப்படுகிறது.
தமிழக அரசின் அறிவிப்புகள், அரசின் முக்கிய தகவல்கள் இந்த இணையதளத்தில் இடம்பெறும். இந்த இணையதளத்தின் சில பக்கங்கள் நேற்று முடக்கப்பட்டு செயல்படவில்லை. அந்த பக்கம் பச்சை நிறத்தில் PAK CYBER SKULLZ என்ற வாக்கியத்துடன் இடம்பெற்றது.
அந்த பக்கத்தில் பாகிஸ்தான் சைபர் என்ற வாக்கியம் இடம்பெற்று இருப்பதால் இது பாகிஸ்தான் ஹேக்கர்களால் முடக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இணையதளம் உள்பட பல முக்கிய இணையதளம் பாகிஸ்தான் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாகவே தீவிரவாதிகள் தமிழக அரசின் இணையதளத்தையும் முடக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.