செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (16:31 IST)

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்.! பிரதமர் தலையிட முதல்வர் வலியுறுத்தல்.!

Modi Stalin Meet
தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இராஜதந்திர ரீதியில் தலையிட வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
 
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
 
கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், மூன்று மீனவர்களை அநியாயமாகப் குற்றவாளிகள் என்று முத்திரை குத்துவது, அவர்கள் நீண்ட காலம் காவலில் வைக்க வழிவகுத்தது என முதல்வர் கூறியுள்ளார். 
 
இந்நிலையானது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவது மட்டுமன்றி அவர்களின் படகுகள் இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்டிருப்பதால் அவர்கள் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் இராஜதந்திரத் தலையீடுகள் நமது மீனவர்களை திருப்பி அனுப்பவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும் தமிழக மக்கள் சார்பாக நான் அவசரமாக வலியுறுத்துகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  

 
இந்த விஷயத்தை முதன்மைப்படுத்தி, நமது மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பது முக்கியம், ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிக்க இந்தியர்கள் என்று முதல்வர் கூறியுள்ளார்.