1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 1 மார்ச் 2025 (11:11 IST)

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து.. ஒரே ஒரு வரிதான்..!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், நடிகர் விஜய் தனது எக்ஸ்  பக்கத்தில் ஒரே ஒரு வரியில் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பிரதமர் மோடி, கவர்னர் ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி, திமுக எம்பி கனிமொழி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதேபோல், நடிகை குஷ்பு உள்பட சில பாஜக தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்து, "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என ஒரே ஒரு வரியாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. திமுகவை விஜய் மறைமுகமாக பல்வேறு மேடைகளில் விமர்சித்து வந்தாலும், அரசியல் நாகரீகம் கருதி முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran