1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2017 (15:03 IST)

பிரபல நடிகர்களை ஏமாற்றி லட்சம் லட்சமாக கறந்த சுவேதா சுரேஷ்!!

சலுகை விலை விமானப் பயணச்சீட்டு பெற்றுத் தருவதாகக்கூறி பல நடிகர்களிடம் மோசடி செய்துள்ளார் சுவேதா சுரேஷ் என்ற பெண். 


 
 
அவரது பேச்சை நம்பிய நடிகர் எஸ்.வி.சேகர், மிர்ச்சி சிவா மற்றும் பாடகர் தேவன் ஏகாம்பரம் உள்ளிட்ட பிரபலங்கள் லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்துள்ளனர்.
 
நடிகர் எஸ்.வி.சேகர் தன்னிடம் சுவேதா சுரேஷ் என்ற பெண் விமானப் பயணச்சீட்டு வாங்கித்தருவதாக ரூ.26 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் சுவேதாவை கைது செய்துள்ளனர்.
 
சுவேதாவிடம் விசாரணை நடித்திய காவல்துறையினர், சினிமா நிகழ்ச்சிகளில் பிரபலங்களிடம் தன்னை எமிரேட்ஸ் நிறுவனத்தின் முகவராகவும் பயண ஏற்பாட்டாளராக அறிமுகம் செய்து கொள்வார்.
 
75 சதவீதம் வரை சலுகை விலையில் விமானப் பயணச்சீட்டுகளை வாங்கித்தருவதாகக் சொல்லி கவனத்தைத் ஈர்ப்பார் என்றும், முதலில் சில பயணச்சீட்டுகளை சலுகை விலையில் வாங்கித்தந்து நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு மீண்டும் அந்த நபரிடம் பெரும் தொகையை முன்பணமாகப் பெற்றுக்கொண்டு மாயமாகிவிடுவார் என தெரியவந்துள்ளது.