1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (13:32 IST)

பாஜக குட்டிச்சுவரா ஆகிறும்... வழக்கம் போல் ஆரம்பித்த சு.சுவாமி!!

தமிழகத்தில் பாஜகவை ஆதரித்து ரஜினி களமிறங்கினால் அந்த கட்சி மேலும் குட்டிச்சுவராகத்தான் போகும் என சுப்பிரமணியன் சுவாமி பேசியுள்ளார். 
 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியை சமீப காலமாக விமர்சித்து வருகிறார் அதேபோல அவர் தனது சொந்த கட்சியையே விமர்சிக்க தயங்காதவர். அந்த வகையில் தற்போது அவர் ரஜினி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது... 
 
நடிகர்கள் அரசியலுக்கி வரக்கூடாது, அப்படி வந்தால் அவர்கள் தொண்டர்களாகதான் வர வேண்டும். அதை விடுத்து தலைமை பொறுப்புக்கு வர நினைக்க கூடாது என தெரிவித்தார். அதோடு, எதிர்காலத்தில் தமிழகத்தில் ரஜினி பாஜகவை எதிர்த்து ரஜினி களமிறங்கினால், அந்த கட்சி மேலும் குட்டிச்சுவராகத்தான் போகும் என தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர், சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யமாட்டார்கள். ரஜினி பல காலமாக அரசியலுக்கு வருகிரேன் வருகிறேன் என கூறி வருகிறார். அடுத்து அவர் படம் ஒன்று வெளியாக உள்ளதால் இப்படி பேசி வருகிறார் என சுப்பிரமணியன் சுவாமி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.